உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு பிரகாசமான வாய்ப்பு

10 டெஸ்டில் இந்திய அணி ஐந்திலும், 7 டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நான்கிலும் வெற்றி பெற்றால் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிச்சுற்றில் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு பிரகாசமான வாய்ப்பு
ANI

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிச்சுற்றில் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணி தற்போது 2-வது இடத்திலும், 2-வது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு இந்திய அணி வங்கதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்) ஆகிய அணிகளுடன் மொத்தம் மூன்று தொடர்களில் 10 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணி 5-ல் வெற்றி பெற்றாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகளிலும், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்டுகளிலும் விளையாட உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4-ல் வெற்றி பெற்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் எனத் தெரிகிறது.

இந்திய அணி 2021, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in