
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,140 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.86,160-க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதன்படி இன்று காலை 22 காரட் தங்கம், கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 10,700-க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 85,600-க்கும் விற்பனை ஆனது.
இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை 200% உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒரே நாளில் 2-வது முறையாகவும் தங்கம் விலை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்த நிலையில், பிற்பகலில் அதிரடியாக ரூ. 560 உயர்ந்தது. அதன்படி தற்போது ஒரு சவரன் ரூ. 1,140 உயர்ந்து ரூ. 86,160-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கிராம் ஒன்றுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 10,770-க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயா்ந்து ரூ.1.60 லட்சத்து விற்பனையாகிறது.