ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: ரூ. 95 ஆயிரத்தைக் கடந்து விற்பனை | Gold Rates |

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,560 உயர்ந்துள்ளது...
ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்த நிலையில் ஆபரணத் தங்கம் ரூ. 95,200-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறியும் இறங்கியும் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் 17 அன்று புதிய உச்சமாக ரூ. 97,600-ஐ எட்டியது. இதனால் தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் படிப்படியாகக் குறைந்தது. கடந்த நவம்பர் 4 அன்று ரூ. 90,000-க்கு விற்பனையானது.

அதன்பின் பெருமளவிலான மாற்றங்கள் இல்லாத நிலையில், நவம்பர் 11 அன்று மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. அன்றைய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 400-ம், சவரனுக்கு ரூ. 3,200-ம் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 93,000-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து நேற்று (நவ.12) சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 92,800-க்கு விற்பனை ஆனது. இன்று காலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,800-க்கும், சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ரூ. 94,400-க்கும் விற்பனையானது. ஆனால் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ரூ. 2,400 உயர்ந்து ஒரு சரவன் தங்கம் ரூ. 95,200-க்கும் கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,900-க்கும் விற்பனையாகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,560 உயர்ந்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் காலையில் ரூ. 9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ. 1 உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 183-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 1.83 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai, with the price of ornamental gold rising twice in a single day, ornamental gold is being sold at Rs. 95,200.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in