பாஜகவில் இணைந்த முன்னாள் நீதிபதி

ஊழல் நிறைந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்.
அபிஜித் கங்கோபாத்யாய்
அபிஜித் கங்கோபாத்யாய் ANI
1 min read

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இன்று பாஜகவில் இணைந்தார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து விலகுவதாக அபிஜித் கங்கோபாத்யாய் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 2018 முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் முன்பே நீதிபதி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மார்ச் 7-ல் பிற்பகலில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. அப்போது நான் பாஜகவில் இணைகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தை ஆளும் கட்சிதான் தூண்டியது. பாஜகவின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கட்சியில் இணைய உள்ளேன்” என்றார்.

இந்நிலையில் அபிஜித் கங்கோபாத்யாய் இன்று பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்ததைத் தொடர்ந்து அவர், “பாஜகவில் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் நிறைந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in