மக்களவைத் தேர்தல் தேதி சனிக்கிழமை அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு@ECISVEEP
1 min read

2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக நேற்று நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலையில் பொறுப்பேற்ற இவ்விருவரும் மக்களவைத் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையுடன் சேர்ந்து, சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in