Dattajirao Gaekwad
Dattajirao Gaekwad@bcci

இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரர் காலமானார்

இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர், தத்தாஜிராவ் கெயிக்வாட் 95 வயதில் காலமானார்.
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தத்தாஜிராவ் கெய்க்வாட் 95 வயதில் காலமானார். இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரராக திகழ்ந்த தத்தாஜிராவ் கெயிக்வாட் 1952 முதல் 1961 வரை இந்திய அணிக்காக 11 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார்.

மேலும் 1959-ல் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார். இந்திய அணிக்காக 11 டெஸ்டுகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 350 ரன்கள் அடித்துள்ளார் தத்தாஜிராவ் கெயிக்வாட்.

ரஞ்சி கோப்பையில் பரோடா அணியின் தூணாக இருந்த இவர், 110 முதல் தர போட்டிகளில் 17 சதம், 23 அரைசதங்களுடன் 5788 ரன்கள் குவித்துள்ளார். ஆட்டமிழக்காமல் 249 ரன்கள் எடுத்ததே இவரின் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் இவரது தலைமையில் 1957-58 ரஞ்சி கோப்பையை பரோடா அணி வென்றது. 2016-ல் இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றவர் தத்தாஜிராவ் கெய்க்வாட்.

logo
Kizhakku News
kizhakkunews.in