ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ANI

ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் (பாஜக) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் முதலமைச்சர் கட்டார் ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

2019-ல் ஹரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 41 இடங்களில் வெற்றிபெற்றது. ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களில் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து, பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சௌதாலா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பகிர்வில் உடன்பாடு இல்லாததால் துஷ்யந்த் சௌவுதாலாவுக்கும், பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் முதலமைச்சர் கட்டார் ராஜினாமா செய்தார்.

ஜேஜேபி தனது ஆதரவை திரும்பப் பெற்றாலும், தற்போது பாஜகவில் 41 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 7 சுயேச்சை எம்எல்ஏ-க்களும், ஹரியானா லோகித் கட்சியை சேர்ந்த ஒருவரும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளனர். சுயேட்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in