சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு
1 min read

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான மழை வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:

"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை லேசான மழை இருக்கும். ஆனால், அச்சப்படுவதற்கு ஏதும் இல்லை. மிதமான மழையே பெய்யக்கூடும்.

டிசம்பர் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கவலைகொள்வதற்கு ஒன்றும் இல்லை. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலேயே கனமழை பெய்யக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in