சிஏஏ: விஜய் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
சிஏஏ: விஜய் எதிர்ப்பு
சிஏஏ: விஜய் எதிர்ப்புANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பாஜக அறிவித்திருந்தது. மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் விஜய் கூறியதாவது:

“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in