விதிமுறையை மீறிய பும்ரா: அபராதப் புள்ளியை வழங்கிய ஐசிசி

அடுத்த 24 மாதங்களில் இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருந்தால் அவருக்கு தடை விதிக்கப்படலாம்
பும்ரா
பும்ராANI
1 min read

ஐசிசியின் விதிமுறையை மீறியதாகக் கூறி பும்ராவிற்கு ஒரு அபராதப் புள்ளியை வழங்கியது ஐசிசி.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் பும்ரா ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு ஒரு அபராதப் புள்ளியை வழங்கி ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில், இங்கிலாந்து வீரர் ஆலி போப் ரன் ஓடும் போது, பும்ரா குறுக்கே வந்து, அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தினார். இதனை வேண்டுமென்றே பும்ரா செய்ததாகக் கூறி ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இது லெவல் 1 மீறலாகக் கருதி, பும்ராவுக்கு ஒரே ஒரு அபராத புள்ளியை மட்டும் ஐசிசி வழங்கியுள்ளது.

மேலும், கடந்த 24 மாதங்களில் பும்ராவுக்கு இது முதல் விதிமீறல் என்பதால், அடுத்த 24 மாதங்களில் இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருந்தால் அவருக்குத் தடை விதிக்கப்படலாம்.

logo
Kizhakku News
kizhakkunews.in