டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி@TNPSC_Office
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டிஎன்பி.எஸ்சி தற்போது தலைவர் இல்லாமல், 4 உறுப்பினர்களுடன் மட்டுமே செயல்படுகிறது. தற்போது உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா, கோவை ஸ்ரீ நாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முனைவர் பிரேம் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 அண்டுகளுக்குப் பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in