ஷேக் சப்ஜி
ஷேக் சப்ஜி@MakacetOfficial

கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான எம்.எல்.ஏ!

Published on

ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினரான ஷேக் சப்ஜி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

ஆந்திர மாநில மேற்கு கோதாவரி தொகுதி எம்.எல்.ஏ ஷேக் சப்ஜி. இவர் இன்று மதியம் தனது காரில் எலூருவில் இருந்து பீமாவரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஷெர்குவாடா பகுதியில் எதிரே வந்த கார், சப்ஜியின் கார் மீது வேகமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த சப்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த உதவியாளர் மற்றும் காவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஷேக் சப்ஜியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை எலூரு நகரத்தில் நடைபெற்ற அங்கன்வாடி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் தான் சஃப்ஜியின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து மேற்கு கோதாவரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவி பிரகாஷ் பிடிஐ-யிடம் பேசியபோது, எதிரே வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சப்ஜியின் கார் மீது மோதியுள்ளது. இதில் சப்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உண்டி காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றார்.

ஆசிரியரான சப்ஜி சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in