ரத்தம் அல்ல, அன்பும் மரியாதையுமே குடும்பத்தை உருவாக்கும்: ராதிகா மகள் பதிவு

ரத்தம் மட்டுமே குடும்பத்தை உருவாக்காது. அன்பும், மரியாதையும் தான்.
வரலட்சுமி- நிகோலய் சச்தேவின் நிச்சயதார்த்தம்
வரலட்சுமி- நிகோலய் சச்தேவின் நிச்சயதார்த்தம் @Rayane R Mithun

பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி - தொழிலதிபர் நிகோலய் சச்தேவின் நிச்சயதார்த்த விழா மும்பையில் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்களை வரலட்சுமியின் சகோதரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

2012-ல் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வரலட்சுமி. இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி- 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார் வரலட்சுமி. இவர்களின் நிச்சயதார்த்தம் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை வரலட்சுமியின் சகோதரி ரயான் மிதுன் தனது இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:

“இந்தக் காதல் கதைக்காகத்தான் இத்தனை நாளாகக் காத்துக் கொண்டு இருந்தோம். உங்களை இப்படிக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்டேப்போ ஹாஃப்போ இல்லை, குடும்பம் மட்டும் தான் என்பது முக்கியமான பாடம். ரத்தம் மட்டுமே குடும்பத்தை உருவாக்காது. அன்பும், மரியாதையும் தான். அவை நம்மிடம் எப்போதும் இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in