தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்: தகவல்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தகவல்ANI
1 min read

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகச் சேர்வதற்கான பிரத்யேகச் செயலியை நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய் மார்ச் 8 அன்று அறிமுகப்படுத்தினார். முதல் உறுப்பினராக விஜய் அதில் இணைந்தார். வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையப் பயன்பாட்டாளர்கள் என ஒவ்வொரு தளங்களிலும் உறுப்பினர் சேர்க்கைக்குச் செயலி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் கட்சியில் சேர முயன்றதால், செயலி முடங்கியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தவெகவில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் கல்லணை தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி தொடங்கிய மூன்று நாள்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in