உத்தரப் பிரதேசத்தில் உறுதியானது கூட்டணி: காங்கிரஸுக்கு 17 தொகுதிகள்

காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 20 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் எனக் கேட்டதைத் தொடர்ந்து 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்ANI

உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தங்களுக்கு 20 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கேட்டதைத் தொடர்ந்து 11 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிவந்தார். இந்நிலையில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 80 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியபோது, “எல்லாமும் நன்றாக முடியும். ஆம். நிச்சயமாக கூட்டணி உண்டு. ஒரு பிரச்னையும் இல்லை” என்றார். 2019 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in