மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக: ‘இந்தியா டுடே’ கருத்துக்கணிப்பு

இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என...
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI
1 min read

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 53 சதவீத வாக்குகளுடன் 39 இடங்களையும் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 298 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 153 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 52 சதவீத மக்கள், பிரதமர் மோடியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவார் எனக் கூறியுள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in