கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சீனிவாசன்
ரஞ்சித் சீனிவாசன்
1 min read

கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் 19-ல் பாஜக மோர்ச்சா செயலாளரும் வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசனின் ஆலப்பூழா வீட்டில் அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனது மனைவி, குழந்தைகள் முன் அவர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளத்தில் எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் கே.எஸ். ஷான் ஆலப்புழாவில் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பழிக்குப் பழி வாங்கும் விதமாகவே ரஞ்சித் சீனிவாசன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கேரள நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 8 குற்றவாளிகளுக்கு எதிராக கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் அதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in