லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான்?

லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான்?
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அமீர் கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அமீர் கான் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை கொடுத்த அட்லியை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் கைகோர்ப்பாரா? லோகேஷ் கனகராஜ் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in