ஜானி
ஜானி@AlwaysJani

பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி கைது!

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானிக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
Published on

பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின்போது ஜானி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

நர்சிங்கியிலுள்ள தனது இல்லத்திலும் வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகாரளித்தார்.

இவருடையப் புகாரின்பேரில் ராய்துர்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது கூடுதல் விசாரணைக்காக நர்சிங்கி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார். மேலும், தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நடன இயக்குநர் ஜானி பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானிக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in