நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: மருத்துவர் காந்தராஜ் மீது ரோஹிணி புகார்!

முன்னதாக, “பெண்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்த தொந்தரவு இருந்தாலும் நீங்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று ரோஹிணி தெரிவித்திருந்தார்.
ரோஹிணி
ரோஹிணி
1 min read

நடிகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கிளப்புவதாக மருத்துவர் காந்தராஜ் மீது ரோஹிணி புகார் அளித்துள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோஹிணி, “பெண்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். எந்த தொந்தரவு இருந்தாலும் நீங்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகக் கூறி மருத்துவர் காந்தராஜ் என்பவர் அவதூறு பரப்புவதாக, ரோஹிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோஹிணி தெரிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in