நடிகை மலாய்கா அரோராவின் தந்தை தற்கொலை!

அனில் அரோரா கடற்படையில் பணியாற்றியவர்.
நடிகை மலாய்கா அரோராவின் தந்தை தற்கொலை!
@malaikaaroraofficial
1 min read

பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை செய்துகொண்டார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் மலாய்கா அரோரா. இவரது தந்தையான அனில் அரோரா மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று காலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனில் அரோரா கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அனில் அரோராவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in