தங்கலான் ரூ. 100 கோடி வசூல்?: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விளக்கம்

இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
தங்கலான்
தங்கலான்
1 min read

வடமாநிலங்களில் தங்கலான் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.

ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 அன்று இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததா என்று ரசிகர்கள் ஒரு சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் உண்மையின்றி வசூல் குறித்த செய்தியை வெளியிட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு வருமான வரித்துறை உட்பட பலரும் கேள்வி எழுப்புவார்கள். எனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வசூல் குறித்து அறிவித்தால் அது உண்மையாக தான் இருக்கும். சமீபத்தில் ஹிந்தியில் வெளியான தங்கலான் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in