சுந்தர். சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

ஏற்கெனவே வடிவேலு - சுந்தர். சி இணைந்து நடிக்கும் ‘கேங்கர்ஸ்’ படத்தை சுந்தர். சி இயக்கவுள்ளார்.
சுந்தர். சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’
1 min read

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ல் ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே. சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்தது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கடந்த ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தை சுந்தர். சி இயக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே வடிவேலு - சுந்தர். சி இணைந்து நடிக்கும் ‘கேங்கர்ஸ்’ படத்தை சுந்தர். சி இயக்கவுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in