இன்ஸ்டகிராமிலிருந்து விலகினேனா?: யுவன் சங்கர் ராஜா விளக்கம்

“தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது”.
யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா @thisisysr
1 min read

இன்ஸ்டகிராம் தளத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா விலகியதாக வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் நடித்த தி கோட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை விஜய் பாடினார். இந்தப் பாடலுக்கு கலவையான விமர்சனம் எழுந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டகிராமை விட்டு விலகியதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்டுக்கொண்டு வர முயற்சி செய்கிறோம். விரைவில் இன்ஸ்டகிராமுக்குத் திரும்புவேன்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in