யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படக்குழு மீது வழக்குப்பதிவு!

படப்பிடிப்புக்காக வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்களை..
யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படக்குழு மீது வழக்குப்பதிவு!
1 min read

சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாகக் கூறி ‘டாக்ஸிக்’ படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூருவில் பீன்யா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனம் மீது கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே குற்றம் சாட்டினார்.

மேலும், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக ‘டாக்ஸிக்’ படத்தின் தயாரிப்பாளர் மீது கர்நாடக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in