பாடலாசிரியர் எம்.ஜி. கன்னியப்பன் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்ட எம்.ஜி. கன்னியப்பன் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த எம்.ஜி. கன்னியப்பன் பதிப்பகங்கள், பத்திரிகைகளில் சில காலம் பணி புரிந்தார். கதை, கவிதை என இவருடைய படைப்புகள் முன்னணி வார இதழ்களில் வெளிவந்தன.
ஜீ தமிழ் சேனலில் ‘மகாநடிகை’ என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் இவருடைய ஸ்க்ரிப்ட் ஒளிபரப்பானது.
இந்நிலையில் இவர் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார்.