
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், மகளுடைய துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பரில் பூந்தமல்லி அருகேவுள்ள விடுதி ஒன்றில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சித்ரா மரணத்தின்போது, அவருடையக் குடும்பத்தினர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது குற்றம்சாட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து, நசரத்பேட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஹேம்நாத், போதிய ஆதாரம் இல்லாததால், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து கணவர் ஹேம்நாத் மற்றும் 6 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார்கள். சித்ரா கொலை செய்யப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாததால், இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் மகளுடைய துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
காமராஜ் தூக்கிட்டது தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.