சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சின்னத்திரை மூலம் பிரபலமான சித்ரா, கடந்த 2020-ல் மர்மமான முறையில் ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் சித்ராவின் மரண வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்துள்ளது திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம்.