முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு சவால்விட்ட விஷால்!

இரட்டை வரி விதிப்பு, திரையரங்கம் பராமரிப்பு கட்டணம் எனத் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ளது.
விஷால்
விஷால்
1 min read

திரையுலகில் நிறைய வேலைகள் உள்ளதால், அதில் கவனம் செலுத்துங்கள் என்று விஷால் கூறியுள்ளார்.

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, இனி விஷாலை வைத்து புதிய படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நான் தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

விஷாலின் எக்ஸ் பதிவு

“இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசன் என்பவரை உள்ளடக்கி எடுக்கப்பட்ட கூட்டு முடிவு.

அந்த நிதியானது கல்வி, மருத்துவக் காப்பீடு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் நலப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?

திரையுலகில் நிறைய வேலைகள் உள்ளன. அதில் கவனத்தை செலுத்துங்கள்.

இரட்டை வரி விதிப்பு, திரையரங்கம் பராமரிப்பு கட்டணம் எனத் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ளது. நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்.

இதுவரை படங்களைத் தயாரிக்காத மற்றும் இதன் பிறகும் தயாரிக்காமல் இருக்கப்போகும் தயாரிப்பாளர்களே, முன்னேறுவது குறித்து யோசியுங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in