விஜய் கட்சியில் இணைந்து விட்டேனா?: நடிகர் விமல் விளக்கம்

"விஜயுடன் இணைந்து கில்லி படத்தில் 80 நாட்கள் வேலை செய்தேன்".
விமல்
விமல்

விஜயுடன் உள்ள நட்பின் காரணமாகவே பொதுமக்களுக்கு உதவி செய்ததாக நடிகர் விமல் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் அறிவித்தார்.

இந்நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விமல், அங்கு வந்தவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கி உதவியுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விமலிடம், “விஜய் கட்சியில் இணைந்து விட்டீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,

“விஜயுடன் இணைந்து கில்லி படத்தில் 80 நாட்கள் வேலை செய்தேன். அந்த நட்பின் காரணமாகவும், விஜயின் ரசிகர்களாக உள்ள எனது தம்பிகள் அழைத்ததாலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கட்சியில் இணைவது குறித்து எந்த யோசனையும் தற்போது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in