
பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தீடீரென சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனது பயணத்தை தொடங்கிய விக்ராந்த் மாஸ்ஸி, 2013-ல் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
11 ஆண்டுகளாக நடித்துவரும் விக்ராந்த் மாஸ்ஸிக்கு, கடந்த 2023-ல் வெளியான ‘12th fail' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படமும் வெற்றி அடைந்த நிலையில், தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக விக்ராந்த் மாஸ்ஸி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், “கடந்த சில ஆண்டுகள் எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஆனால், ஒரு கணவராக, தந்தையாக, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் 2025-ல் கடைசியாக ஒரு முறை சந்திப்போம். கடந்த இரு படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்” என்று விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ராந்த் மாஸ்ஸி அடுத்த ஆண்டுடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.