எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’
எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’@chiyaan

இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு முன்னதாக இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த அக்டோபரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

“இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகும்” என விக்ரம் சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் கூறினார். இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் காணொளி இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in