"உன் பார்ட்டிக்குதான் என் வாக்கு": 'கோட்' விசில் போடு பாடல்!

வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியது.
"உன் பார்ட்டிக்குதான் என் வாக்கு": 'கோட்' விசில் போடு பாடல்!
படம்: https://twitter.com/vp_offl

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடெஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாகவுள்ளதாகப் படக் குழு இரு நாள்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்திருந்தது. விசில் போடு எனும் இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளதாக அறிவித்த படக் குழு, இதன் முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டது.

இன்று மாலை 6 மணிக்குப் பாடல் வெளியானது. கேளிக்கை விடுதியில் நடப்பதுபோல பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் விஜயுடன் இணைந்து பாடலில் நடனமாடியுள்ளார்கள்.

பிரசாரத்தைத் தொடங்கவா, உன் கட்சிக்குதான் என் வாக்கு என விஜயின் அரசியல் வருகை குறித்த வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in