கோட் படத்தில் 2 பாடல்களைப் பாடியுள்ளார் விஜய்: யுவன் கொடுத்த அப்டேட்

இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ கடந்த மாதம் வெளியானது. இந்தப் பாடலை விஜய் பாடினார்.
யுவன்
யுவன்
1 min read

கோட் படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்களைப் பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கோட்' செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ கடந்த மாதம் வெளியானது. இந்தப் பாடலை விஜய் பாடினார். இந்நிலையில் கோட் படத்தில் விஜய் 2 பாடல்களைப் பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட யுவனிடம் கோட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது, “முதல்முறையாக இப்படத்தில் விஜய் 2 பாடல்களைப் பாடியுள்ளார். படத்தின் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in