‘அரசன்’ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி | Arasan |

அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியது....
‘அரசன்’ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி
‘அரசன்’ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி
1 min read

வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற படங்களால் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தற்போது அரசன் படத்தை இயக்கி வருகிறார். அதில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திற்குப் பிறகு வெற்றி மாறனுடன் சிலம்பரசன் இணைந்துள்ளார். சிலம்பரசனின் 49-வது படமான அரசன், தனுஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வட சென்னை’ படத்தின் கதைக் களத்திலேயே அமையவுள்ளது. இப்படத்தைக் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கடந்த அக்டோபர் 16 சிலம்பரசன் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நேற்று (நவ. 24) முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் “மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in