விஜய் பிறந்தநாள்ANI
சினிமா
விஜய் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற..
தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்களும், ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல் ஆகியோர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:
பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.
செல்வப்பெருந்தகை வாழ்த்து:
இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.