கோட் படப்பிடிப்பில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்: பகிர்ந்த பிரபலங்கள்

கோட் படம் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
விஜய் பிறந்தநாள்
விஜய் பிறந்தநாள்@thisisysr
1 min read

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கோட் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்களும், ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படப்பிடிப்பில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்திள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கோட் படத்தில் நடித்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in