விஜயின் 69-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
விஜயின் 69-வது படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார். இதுவே விஜயின் கடைசிப் படம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை -அனிருத்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜயுடன், இயக்குநர் வினோத், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.