விஜயின் கடைசிப் படம்: 2025 தீபாவளி வெளியீடு!
@KvnProductions

விஜயின் கடைசிப் படம்: 2025 தீபாவளி வெளியீடு!

ஹெச். வினோத் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
Published on

விஜய் கடைசிப் படம் தீபாவளிக்கு!

விஜயின் 69-வது மற்றும் கடைசிப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசியலில் குதித்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் மாநாடு நடைபெறவுள்ளது.

விஜய் நடித்த கோட் படம் சமீபத்தில் வெளியானது.

அரசியலில் நுழைவதால் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் முன்பே அறிவித்த நிலையில் அவருடைய கடைசிப் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். அனிருத் இசை. தயாரிப்பு - கேவிஎன் நிறுவனம்.

இன்று வெளியான பட அறிவிப்பு குறித்த போஸ்டரில், ஜனநாயகத்தின் தீபத்தை ஏந்திச் செல்பவர் என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தப் படம் 2025 அக்டோபரில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயின் கடைசிப் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in