விடுதலை 2 படம் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் போன்றோரின் நடிப்பில், கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘விடுதலை’. இசை - இளையராஜா.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
முன்னதாக, இப்படத்தின் இரு பாகங்களும் ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றன.
இந்நிலையில் விடுதலை 2 படம் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.