
விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை அஜித் தொடங்கியுள்ளதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
‘தடம்’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ போன்ற படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி.
தற்போது அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீஸர் கடந்த நவம்பர் 28 அன்று வெளியானது. இப்படம் வரும் பொங்கலுக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் தொடங்கியுள்ளதாக இயக்குநர் மகிழ் திருமேனி டிடி நெக்ஸ்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.