வேட்டையன் ஓடிடி வெளியீடு எப்போது?: அறிவிப்பு

இப்படம் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வேட்டையன் ஓடிடி வெளியீடு எப்போது?: அறிவிப்பு
1 min read

வேட்டையன் படம் வருகிற நவம்பர் 8 அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய படம் ‘வேட்டையன்’.

இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்தனர். இசை - அனிருத்.

லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, வேட்டையன் படம் வருகிற நவம்பர் 8 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in