ரஜினியின் வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு!

என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
ரஜினியின் வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு!
1 min read

ரஜினியின் வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.

இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இதைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க கோரியும், என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

வேட்டையன் படத்துக்கு தடை கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் வேட்டையன் படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் லைகா நிறுவனம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in