மா.பொ.சி படத்தை வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன்
மா.பொ.சி படத்தை வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன்@DirectorBose

மா.பொ.சி. படத்தை வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன்

இது கல்வி சம்பந்தப்பட்ட படம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
Published on

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் மா.பொ.சி. படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வழங்குகிறது.

குணச்சித்ர நடிகரான போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர். இதைத் தொடர்ந்து இவர் விமல் நடிப்பில் “மா.பொ.சி.” படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த 2022-ல் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இது கல்வி சம்பந்தப்பட்ட படம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மா.பொ.சி. படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான போஸ்டரை போஸ் வெங்கட் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in