சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘விடுதலை 2’

விடுதலை, சூரி
விடுதலை, சூரி@VijaySethuOffl
1 min read

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் நடிப்பில், கடந்த மார்ச் மாதம் வெளிவந்த படம் ‘விடுதலை’. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இப்படத்தின் இரு பாகங்களும் ரோட்டர்டாமில் நடக்கவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன.

நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 53-வது சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ளது. 2021-ல் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்ப் படமான ‘கூழாங்கல்’ டைகர் விருதை (Tiger Award) வென்றது.

இந்த வருடத்திற்கான விழாவில் விடுதலை படத்தின் இரு பாகங்களும் திரையிடப்படவுள்ளன. மார்ச் மாதம் வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகம் இன்னும் வெளிவரவில்லை.

அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடக்கூடிய மக்கள் இயக்கம் குறித்த கதை தான் விடுதலை. இப்படத்திற்கு இசை - இளையராஜா. 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in