மனுசி படத்துக்கு சென்சார் மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் வெற்றி மாறன் வழக்கு

இப்படத்தின் டிரெய்லர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது.
மனுசி படத்துக்கு சென்சார் மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் வெற்றி மாறன் வழக்கு
படம்: https://x.com/GopiNainar
1 min read

ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து, படத் தயாரிப்பாளர் வெற்றி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்து ஆண்ட்ரியாவை வைத்து மனுசி எனும் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது.

இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கடந்தாண்டு செப்டம்பரில் தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்தது. மத்திய அரசை எதிர்மறை தோற்றத்தில் காண்பிப்பது, கம்யூனிச சித்தாந்தம் குறித்து குழப்பத்தை உண்டாக்குவது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது உள்ளிட்டவை காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தணிக்கை செய்யப்படாததற்கு எதிராக படத் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். தணிக்கை தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பு தன் தரப்பு கருத்துகளை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என வெற்றி மாறன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்டு புதிய குழுவினருடன் படத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வெற்றி மாறன் தரப்பில் கடந்த மார்ச் 29-ல் முறையிடப்பட்டது. தேவைப்பட்டால், படத்திலிருந்து ஏதேனும் பகுதியை எடிட் செய்யத் தயார் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மனுசி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பதை எதிர்த்து வெற்றி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஜூன் 4-ல் விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் இதை விசாரிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in