மீண்டும் இணையும் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி

விடுதலை இரு பாகங்கள் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் சூரியுடனும் கைக்கோர்கிறது.
மீண்டும் இணையும் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி
படம்: https://x.com/wunderbarfilms
1 min read

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் வெற்றி மாறன், தனுஷ் மீண்டும் இணையவுள்ளார்கள்.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் திரையரங்குகளில் 25 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோருக்குப் படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தக் கொண்டாட்டத்துடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

"விடுதலை 2 வெற்றியைத் தொடர்ந்து, வெற்றி மாறனின் 9-வது படத்துடன் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

விடுதலை இரு பாகங்கள் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் சூரியுடன் கைக்கோர்கிறது. இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இவர் வெற்றி மாறனின் குழுவில் முக்கியமானவர். விடுதலை இரு பாகங்களின் வெற்றிக்கும் இவர் பங்காற்றியுள்ளார்" என்று ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை 2 வெற்றி மாறனின் 7-வது படம். அடுத்து சூர்யாவுடன் வாடிவாசலில் கைக்கோர்கிறார் வெற்றி மாறன். வாடிவாசலுக்குப் பிறகு தனுஷை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி இதுவரை மிரட்டலான வெற்றியை மட்டுமே கொடுத்துள்ளதால், இந்த அறிவிப்பின் மூலம் ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in