டெல்லி கணேஷ் மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்

40 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் அதிகமான படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு...
டெல்லி கணேஷ் மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்
1 min read

டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மகத்தான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80.

டெல்லி கணேஷின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் பதிவு

“மூத்த நடிகர் டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் அதிகமான படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in