கை கால் செயலிழந்தது: உதவி கோரிய நகைச்சுவை நடிகர்

வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கை கால் செயலிழந்தது: உதவி கோரிய நகைச்சுவை நடிகர்
1 min read

பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்யுமாறு உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் இதுவரை தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022-ல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார் வெங்கல் ராவ். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது:

“எனது கை, கால் செயலிழந்தது. என்னால் நடக்க முடியவில்லை, சரியாக பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை. மருந்து வாங்கவும் பணம் இல்லை. நடிகர்கள், உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in