ஸ்ரியா ரெட்டிக்குப் பாராட்டு: இயக்குநர் வசந்த பாலன் பதிவு

படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம்....
வசந்த பாலன்
வசந்த பாலன் @Vasanta Balan

தலைமைச் செயலகம் இணையத் தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி ஸ்ரியா ரெட்டிக்கு தான் என இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார்.

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் தலைமைச் செயலகம் இணையத் தொடர் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ரியா ரெட்டி, கிஷோர், பரத், ரம்யா நம்பீசன் உட்பட பலரும் நடித்தனர். இந்த இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தில் நடித்த ஸ்ரியா ரெட்டியைப் பாராட்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “கொற்றவை (ஸ்ரியா ரெட்டி). மிகவும் வலிமையான பங்களிப்பு. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல ! எப்படி வருது ? நீங்க ஹேப்பி ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு, அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் ஹேப்பி ஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத் தொடரின் தரம், வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.

என் மேல் கொண்ட நம்பிக்கையில் மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள். அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும், ‘நான் வசந்த பாலனுக்காக மட்டுமே நடிக்கிறேன்’ என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள்.

தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான். நன்றி ஸ்ரியா ரெட்டி” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in